Tamil Club
2023-24 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி சென் மேரிஸ் பப்ளிக் பள்ளி இலக்கிய மன்றம் நற்றமிழ் இலக்கிய மன்றம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இவ்விழா மாணவர்களிடத்தே தமிழ் ஆர்வத்தையும் அறிவையும் வளர்ப்பது தமிழ் மன்றத்தின் நோக்கமாகும்.
பண்டைய தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பரவ செய்தல் தமிழில் தொழில்நுட்ப அறிவை வளர்த்தல், தமிழ் நிகழ்ச்சிகள் சமுதாய நிகழ்வுகளுக்கு ஏற்ப செயல்படுத்துதல் என்று முடிவெடுக்கப்பட்டது.
இயல் என்பது
சீறுகின்ற சீர்கள்-தம்
சினத்தினை சீர் செய்ய
சிறப்பான தொடை கொண்டும்
செருக்கோடு சொல்லும் நம்
செவிக்கான செய்திகளே
செந்தமிழின் இயற்றமிழ் என்ற வழியிலும்,
இசை என்பது
தாளமெனின் தாயோடு
இயலென்னும் சேய்பேசி
இருதயத்தை ஆட்கொள்ளும்
இணையற்ற தாய் மொழியின்
இதழ் போன்ற தேன் தமிழில் இசைத்தமிழ் என்ற வழியிலும் நாடகம் என்பதுஉள்ளம் தன்னை உருக்குகின்ற உலகத்தின் உணர்வுகள் எல்லாம் உயிர்த்ததடி உன்னுருவில் உயிர்த்திருக்கும் நாடகத் தமிழ் என்ற வழியில் மாதம் தோறும் எம் பள்ளியில் சிறப்புடன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.